Tap to Read ➤

அதிகமாக காளான் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு காளான் பயன்படுத்தப்படுகிறது.
HTML Tamil
காலன்களின் பலவகை இருந்தாலும், மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான்களே உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
காளான்களில், பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதற்கேற்ப, காளான்களை அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு சில பிரச்சனைகள் உண்டாகிறது.
காளானை அதிகம் சாப்பிட்டால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
காளானை அளவுக்கு மீறி சாப்பிட்டால், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற தோல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.
காளான்களை அதிக அளவு உட்கொண்டால், சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல், மூக்கு, தொண்டை வறண்டு போகவும் வாய்ப்புள்ளது.
அளவுக்கு மீறி காளான் உணவில் சேர்த்துக்கொண்டால், அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் உடல் சோர்வும் உண்டாகலாம்.
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், காளான் அதிகமாக சாப்பிடும்போது, மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காளான் அதிகம் சாப்பிட்ட ஒரு சிலருக்கு, மயக்கத்துடனும், தன்னிலை மறந்து கவனமின்றியும் இருக்க வாய்ப்பு உண்டாகலாம்.
காளானின் பியூரின் சத்து இருப்பதால், கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால், பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.