Sidhanathan K       May 24, 2024

காதலியிடம் காதலை சொல்வது போல கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..?

இரவில் தூங்கும்போது கனவு காண்பது இயல்பான ஒன்று. அந்த கனவில் நிகழும் செயல்கள் நம் வாழ்வில் எந்த அளவுக்கு ஒன்றிப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்ணாடியில் உங்களை பார்ப்பது போல் கனவு கண்டால் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

யாரோ ஒருவர் உங்களை அழகுபடுத்துவது போல கனவு கண்டால் நெருங்கிய நண்பர் நம்பிக்கை துரோகம் செய்ய போகிறார் என்று அர்த்தம்.

நீங்கள் முகம் தெரியாத ஒருவருடன் பேசுவதுபோல் கனவு கண்டால் மற்றவர்களால் பதவி உயர்வு பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் ஒரு அழகான பெண்ணை கண்டால், நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் ஆசிரியரை பார்த்து பேசுவது போல கனவு கண்டால், உங்கள் வாழ்வில் நன்மை ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.

நீங்கள் யாருக்காவது அறிவுரை கூறுவது போல் கனவு வந்தால் உங்கள் நண்பர்களிம் மனக்கசப்பு தோன்றும் என்று அர்த்தம்.

நீங்கள் யாரிடமாவது கோபம் கொள்வது போல் கனவு கண்டால் நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் தோல்வியில் முடியலாம்.

உங்கள் காதலன் அல்லது காதலியிடம் காதலை சொல்வது போல கனவு கண்டால் உங்கள் வேலை வெற்றிகரமாக முடிவடையும் என்று அர்த்தம்.

பெண் கர்ப்பம் ஆவது போல் கனவு கண்டால் நீங்கள் வளர்ச்சி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

அறிமுகமில்லாதவர்களுடன் உடலுறவு கொள்வது போல் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உயரப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் அடிக்கடி பாலியல் சம்பந்தமான கனவு கண்டால், விரும்பியது எதுவும் கிடைக்காது என்று அர்த்தம்.

இங்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories