Tap to Read ➤

கோபமான மனநிலையில் செய்யக்கூடாதது என்ன தெரியுமா?

கோபம் என்பது ஒரு கொடிய வியாதியாகும்.
HTML Tamil
மன அழுத்தம், தலைவலி, அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிகக் கோபம் வரும்.
கோபம் அளவுக்கு அதிகமானல், மன அழுத்தம், இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
கோபத்தை அடக்க முடியாமல் இருக்கும்போது, எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
வாகனம் ஓட்டக்கூடாது

கோபமாக இருக்கும்போது வானத்தை இயக்குவது ஆபத்தானது. நம் சிந்தனைகள் சிதறும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
அதிகம் சாப்பிடக்கூடாது

கோபமாக இருக்கும்போது அதிகம் சாப்பிட்டால், மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்கிறது.
தூங்கக் கூடாது

கோபமாக படுக்கைக்கு தூங்கச் செல்லக்கூடாது. இதனால் எதிர்மறை உணர்ச்சிகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் முடியும்
தூங்கச் செல்வதற்கு முன்பாக மனநிலையை தெளிவாக்கிக் கொள்ளவது மிகவும் அவசியமாகும்.
வாக்குவாதம் வேண்டாம்

கோபமான மனநிலையில் வாக்குவாதம் செய்தால், நல்ல முடிவுகளை ஏற்படுத்தாததோடு, இதயத்தையும் பாதிக்கச் செய்யும்.
மது அருந்தக்கூடாது

கோபத்தை அமைதிப்படுத்த மதுவை தேடுவது தவறானது. ஆல்கஹால் கோபத்தை மேலும் அதிப்படுத்தவே வாய்ப்பை உண்டாக்கும்.
முக்கியமானவர்களிடம் பேச வேண்டாம்

 உயரதிகாரிகள், பெற்றோர், பிடித்த நண்பர்கள் உள்ளிட்டோரிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
கோபத்தின் போது பேசும் சில தேவையற்ற வார்த்தைகள், முக்கியமானவர்களின் உறவை சிதைக்க செய்துவிடும்.
முடிவுகளை எடுக்க வேண்டாம்

 கோபமான மனநிலையில் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. கோபத்தில் எடுக்கும் முடிவு ஒருபோதும் நல்ல பலனை தராது.