Tap to Read ➤

உடல் பலம் பெற சாப்பிட வேண்டிய பருப்பு என்ன தெரியுமா?

ஆரோக்கியத்திற்கு பருப்பு வகைகள் நன்மை தரும்.
HTML Tamil
பொதுவாக உணவில் சேர்க்கப்படும் பருப்பு வகைகள், உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன.
மற்ற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு எனப்படும் பாசி பருப்பும், உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன.
பாசிப்பருப்பில் வைட்டமின்கள், புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடல் பலவீனமானவர்கள், பாசிப்பருப்பை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான ஊட்டம் கிடைக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் நல்லது.
முளைக்கட்டிய பாசிப்பருப்பை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
ஜீரண மண்டலத்தை வலிமையாக்க பாசிப் பருப்பு உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
உணவுக்கு பயன்படும் கீரைகளோடு பாசிப்பருப்பை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் வெப்பம் சீராகும்.
நார்சத்துள்ள பயத்தம் பருப்பு, கொலஸ்ட்ராலை உடலில் சேர விடாது. மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
பாசி பருப்பை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால், மன அழுத்தம், மன இறுக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
பாசிப்பருப்பை அரைத்து, உடலில் தேய்த்து குளித்தால் சருமம் பொலிவு பெறும். தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.