Tap to Read ➤

ஆட்டு மந்தைக் கோட்பாடு என்றால் என்னவென்று தெரியுமா?

"Herd Behavior"ஆட்டு மந்தைக் கோட்பாட்டில் உள்ள பின்னணி!
varalakshmi n
மலைப்பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று மலை உச்சியில் ஏறி அருகாமையில் உள்ள மலைப் பாறை மீது குதித்துப் பார்த்துள்ளது
இரு மலைகளுக்கு இடைப்பட்ட தூரம் அதிகம் என்பதால் அந்த ஆடு கீழே விழுந்து மாய்ந்து போனது
அதனைப் பின்தொடர்ந்து மேய்ந்து கொண்டிருந்த எல்லா ஆடுகளும் ஒன்றின் பின் ஒன்றாக,துள்ளிப் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளன!
பிற்காலத்தில் "ஆட்டு மந்தைக் கோட்பாடு
(herd behavior) பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இச்சம்பவம் பிரதான காரணமாக மாறியது
நவீன வாழ்வியல் முறைகளில் நமது உணவு, உடை, நடை பாவனைகளை நாம் உன்னிப்பாக கவனித்தால், ஆட்டு மந்தைக் கோட்பாட்டை அணுவளவும் பிசகாது நாம் கடைப்பிடிப்பதை கண்டு கொள்ளலாம்
சடங்கு சம்பிரதாயத்தை, கலாச்சாரம் சார்ந்த திணிப்புக்களை தழுவித் தான் ஆகவேண்டும் என்பதே "ஆட்டு மந்தை" கோட்பாடாகும்
ஆட்டங்கள் கொண்டாட்டங்களை எல்லோரும் ஆடுகிறார்கள் கொண்டாடுகின்றனர் என்பதற்காக நாமும் ஆடுகிறோம், கொண்டாடுகிறோம்
கிழிந்த, அசிங்கமான ஆடை மாடல்களை எல்லோரும் அணிகிறார்கள் என்பதற்காக எல்லோரும் அணிகிறோம்
இங்கு சுயபுத்தி பறிக்கப்பட்டவர்கள் போல,முடிவெடுக்க மறுக்கப்பட்டவர்கள் போல வாழ்வின் பன்முகப்பட்ட போக்குகளிலும் ஆட்டு மந்தைக் கூட்டத்தை பின்தொடர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்
நிச்சயிக்கப்பட்ட அழிவின் பாலும், கண் காணும் அதல பாதாளத்திற்கும் நம்மைத் தள்ளி விடும் என்று தெரிந்து சுயமாய் செயல்படுவோம்