Tap to Read ➤

ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காதது என்னென்ன தெரியுமா ?

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்க்கும் விஷயங்கள்..!!
Sidhanathan K
சில விஷயங்களில் ஒருவருக்கு நல்லதாக தோன்றுவது, மற்றவர்களுக்கு கெட்டதாகத் தான் தோன்றும். ஏனென்றால் எல்லோருடைய மனநிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
பெண்கள் ஆண்களை அதிகம் விரும்புவதற்குக் காரணம் அவர்களின் சில குணங்கள்தான். அதே நேரத்தில், வெறுப்பும் சில குணங்களால் தான் ஏற்படுகிறது.
தங்கள் ஆசைகள், உணர்வுகள், விருப்பங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தாத ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. பெண்கள் வெளிப்படையாக இருப்பவர்களையே விரும்புகிறார்கள்.
தங்களை அதிகாரம் செய்யும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. அதே சமயம் செய்யும் தவறுகளை அமைதியாக சுட்டிக் காட்டும் ஆண்களை தான் விரும்புகிறார்கள்.
பொய் சொல்லி அதை உண்மையாக்க முயற்சிக்கும் ஆண்களை பெண்கள் புறக்கணிப்பார்கள். அதே நேரத்தில் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் ஆண்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.
பெண்கள் கெட்ட வார்த்தையில் திட்டும் குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள்.
நான் ஒரு ஆண் என்ற கர்வத்துடன் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.
எந்த ஒரு செயலிலும் பிறரின் உதவியை எதிர்பார்க்காமல் சுயமாக செயல்படும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.
ஒரு பெண் தனக்குப் பிடித்தமான ஒன்றைச் செய்து தன்னை மகிழ்விக்கும் ஆண் கிடைத்தால் மகிழ்ச்சி அடைகிறாள்.
பல பெண்கள் தங்கள் காதலன்/கணவன் கண்ணியமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதைப் பொருட்படுத்தாத ஆண்களை பெண்கள் நிராகரிக்கிறார்கள்.
எதிர்பார்க்கும் தருணத்தில் அவளை ஏங்க வைத்து எதிர்பாராத விதமாக முத்தமிடும் விளையாட்டுத்தனமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்.
சண்டைக்குப் பிறகு காதலன்/கணவன் போன் செய்து பேசும்போது ஒரு பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெண்களுக்கு இது போன்ற ஆண்களை மிகவும் பிடிக்கும்.
உதவும் குணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நேர்மை, அன்பு இவற்றோடு காதலையும் காமத்தையும் இணைக்கும் ஆண்களே பெண்களின் விருப்பம் ஆகும்.
மகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள்.