Tap to Read ➤

உலகின் நீளமான மூக்குடைய மனிதர் யார் தெரியுமா?

மிகவும் நீளமான மூக்குடைய நபரின் புகைப்படம் இணையத்தில் வைராகியுள்ளது.
HTML Tamil
விநோதமாகத் தனித்த இயல்போடு உள்ள மனிதர்களை, கின்னஸ் உலக சாதனை அமைப்பு தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது.
அந்த வகையில், உலகில் நீளமான மூக்கு கொண்ட மனிதராக அங்கீகரிக்கப் பட்டவரின் புகைப்படம், இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் வெட்டர்ஸ் என்பவரே மிக நீளமான மூக்கு கொண்ட மனிதராக கருதப்படுகிறார்.
இங்கிலாந்தில் 1730 ஆம் ஆண்டில் பிறந்த தாமஸ் வெட்டர்ஸின் மூக்கு, 7.5 அங்குலம் (19 செ.மீ) நீளம் கொண்டது.
சர்க்கஸ் கலைஞரான தாமஸ் வெட்டர்ஸ், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தனது திறமையால், மக்களிடம் புகழ்பெற்று விளங்கினார்.
தனது நீளமான மூக்கு மற்றும் விநோதமான தனித் திறமையால் புகழ்பெற்ற தாமஸ் வெட்டர்ஸ், 1780-ம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள Ripley's Believe It Or Not அருங்காட்சியகத்தில், தாமஸ் வெட்டர்ஸின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்ட தாமஸ் வெட்டர்ஸின் புகைப்படம், இணையதளங்களில் வெளியாகி, அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
எனினும், தற்போது உயிர் வாழும் மனிதர்களில், மிகவும் நீளமான மூக்கு கொண்டராக துருக்கியைச் சேர்ந்த மெஹ்மெத் ஒஸியுரேக் உள்ளார்.
துருக்கியில் வாழும் மெஹ்மெத் ஒஸியுரேக்கின் மூக்கின் நீளம், 8.8 செ.மீ. (3.46 அங்குலம்) ஆகும்.