Tap to Read ➤

திருமணத்தின் போது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற சடங்குகளுக்கான காரணங்கள் !!
Sidhanathan K
அன்றிலிருந்து இன்றுவரை இந்து திருமணங்களில் பல்வேறு சடங்கு சம்பிரயதாயங்கள் நடைமுறையில் உள்ளன.
இந்த சடங்குகளில் பல இப்போது நடைமுறையில் இல்லை என்றாலும், சில முக்கியமான சடங்குகள் இன்றளவும் மக்கள் தம் குடும்ப திருமணங்களில் செய்து வருகின்றனர்.
இருமனம் இணையும் திருமணத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.
மணமகனும், மணமகளும் அக்னியை வலம் வரும்போது அம்மியை வலது பக்கத்தில் வைத்திருப்பார்கள்.
மணமகன் மணமகளின் காலைப் பிடித்து அம்மி மீது வைக்கும் போது, இந்தக் கல்லைப் போல உறுதியாக நின்று வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இடர்களிலும் என்னுடன் நிற்க வேண்டும் என்று மணமகன் கூறுவது போல பொருள்.
அம்மியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, மாறாக ஒரு கருங்கல்லின் மீது கூட நிற்க வைத்து இந்த மந்திரத்தைச் சொல்லலாம்.
சப்தரிஷிகளின் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே வானில் நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர்.
இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருப்பதே அருந்ததி நட்சத்திரம்.
ஒரு மணப்பெண் தன் கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜென்மங்களிலும் உனக்கு மட்டுமே மனைவியாக இருப்பேன் என்று கூறுவதே அருந்ததி பார்த்தல் நிகழ்வு.
வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவரையொருவர் பிரிந்து வாழாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை அருந்ததி பார்த்தல் சடங்கு உணர்த்துகிறது.
அருந்ததி பார்ப்பது என்பது திருமண நாள் மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யப்படும் ஒரு சடங்கு. இப்போதெல்லாம் நேரமின்மையால் மண்டபத்திற்கு உள்ளேயே இந்த சம்பிரதாயத்தை முடித்துவிடுகிறார்கள்.
இத்தகைய சடங்குகளுக்கு உரிய நேரம் ஒதுக்கி அதை கடைப்பிடிக்கவும் செய்துவந்தார்கள். ஆனால் தற்போது மாறிவரும் நாகரிக சூழலில் திருமண நிகழ்வில் இத்தகைய சடங்குகள் குறைந்துவருகிறது.