Tap to Read ➤

டிரக்கியாஸ்டமி சிகிச்சை எதற்காக செய்கிறார்கள் என்று தெரியுமா ?

இந்த சிகிச்சையின் பலன் என்ன ?
Sidhanathan K
இந்த சிகிச்சையானது தற்காலிக நிவாரணம் அல்லது சுவாசக் கோளாறுக்கு நிரந்தர நிவாரணம் அளிக்கிறது.
சாதாரண சுவாசம் ஏற்படாதபோது அல்லது நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டால், அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
நீடித்த வென்டிலேட்டர் ஆதரவின் போது இந்த சிகிச்சை அளிக்கப்படலாம்.
குரல் நாண்களுக்குக் கீழே கழுத்தில் ஒரு துளை அமைக்கப்பட்டு அதன் வழியாக ஒரு டியூப் மூச்சுக்குழாயில் செலுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சையானது அடைப்புகளை நீக்கி நுரையீரலுக்குள் காற்று நுழைவதற்கு உதவுகிறது. வாய், மூக்கு மற்றும் தொண்டையைத் தவிர்த்து டியூப் வழியாக சுவாசிக்கலாம்.
தொற்று நோய் இருக்கும் பட்சத்தில் இந்த சிகிச்சை அளிக்கப்படலாம்
இந்த சிகிச்சையானது வலிமிகுந்ததாக இருப்பதால், வலியை உணராமல் இருக்க உங்களுக்கு எப்போதும் மயக்க மருந்து வழங்கப்படும்.
வலி நிவாரணிகள் கொடுத்து மயக்கம் ஏற்பட்ட பின்னர் தான் கழுத்தில் துளையிடப்படும்.
இந்த சிகிச்சை முறையில் நுரையீரலில் துளையிடும் அபாயமும் உள்ளது
இந்த டியூப் தற்காலிகமாக இருக்க வேண்டும் எனில், சிறிய துளை மூலம் சுவாசிக்க முடியும்.
டியூப் நிரந்தரமாக இருக்க வேண்டுமானால் அதை எப்படி பராமரிப்பது என்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.
இந்த சிகிச்சையில் உள்ளவர்களுக்கு முதலில் பேசுவதில் சிக்கல் இருக்கும். பேசுவதற்கு சில பயிற்சி தேவைப்படும்.
கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போலோவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.