Sidhanathan K       Sep 22, 2024

ரயில் பெட்டிகளில் ஏன் இந்த வண்ணக் கோடுகள் உள்ளன தெரியுமா..?

ஆசியாவின் இரண்டாவது மற்றும் உலகளவில் நான்காவது பெரிய ரயில்வே இந்திய ரயில்வே ஆகும். இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

பலமுறை ரயிலில் பயணம் செய்திருக்கும் நமக்கு ரயில் பெட்டிகளில் வரையப்பட்டிருக்கும் சில நுணுக்கமான விவரங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது.

அந்தவகையில், ரயில் பெட்டிகளில் உள்ள வண்ண கோடுகள் எதை குறிக்கின்றன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

நீல ஐசிஎஃப் கோச்சின் கடைசி பெட்டியின் ஜன்னலுக்கு மேலே வெள்ளை அல்லது மஞ்சள் கோடுகள் வரையப்பட்டிருக்கும்.

அதில் வெள்ளைக் கோடுகள் பொது பெட்டியையும், மஞ்சள் கோடுகள் ஊனமுற்றோர் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயணிகளுக்காக நியமிக்கப்பட்ட பெட்டியையும் குறிக்கின்றன.

அதேபோல, இரயில் பெட்டியின் பின்னால் சாம்பல் நிற கோடுகளால் குறிக்கப்பட்டு இருந்தால் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும்.