Tap to Read ➤

தயிருடன் இவைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா ?

தயிருடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
Sidhanathan K
தயிரில் வைட்டமின் பி2, வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.
சில உணவுகளுடன் தயிர் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இல்லையெனில், அது தீங்கு விளைவிக்கும்.
பிரியாணிக்கு வைக்கப்படும் ரைத்தா காம்பினேஷன் கூட தவறுதான். ஏனெனில் தயிர் குளிர்ச்சி தரக்கூடியது. வெங்காயம் சூட்டை கிளப்பக் கூடியது. இந்த இரண்டு எதிர் உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்படும்.
மீன் புரதம் நிறைந்த உணவு என்பதால் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது தவறு. இல்லையெனில் அஜீரணம், வயிற்றுவலி போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.
அதேபோல் புரதச்சத்து மிக்க முட்டையுடனும் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது.
பாலில் இருந்து தயிர் உருவானாலும் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது தவறு. அப்படி சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் அசிடிட்டி ஏற்படும்.
உளுத்தம்பருப்பு மற்றும் தயிர் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இது வாய்வு, வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது.
எண்ணெயில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமானத்தை குறைத்து உடல் உபாதைகளை உண்டாக்கும்.
வெங்காயத்தைப் போலவே மாம்பழமும் சூட்டை உண்டாக்கும் பொருள். எனவே தயிருடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்.