Tap to Read ➤

வலிப்பு வரும் சமயத்தில் இரும்பு பொருள் கொடுத்தால் சரியாகிவிடுமா?

வலிப்பு வரும் போது செய்ய வேண்டியவை!அறிவியல் பூர்வமான விளக்கம் என்ன?
varalakshmi n
மூளையின் ஒரு பக்கத்தில் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது திடீரென்று மின்சார உற்பத்தினால் வலிப்பு உண்டாகிறது
நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்கு கடத்தப்படுகிறது கை,கால்கள் இழுக்கத் தொடங்குவதே வலிப்பு ஆகும்
2 முறைக்கு மேலாக அடிக்கடி வர தொடங்குமானால்,
வலிப்பு நோய் ஆகும்
2 வகை உள்ளது,மூளையின்
ஒரு பகுதியில் ஏற்படும் வலிப்பு, மற்றொன்று மூளை முழுவதும் ஏற்படும் வலிப்பு
மூளை முழுவதும் ஏற்படாமல் ஒரு பகுதியில் தோன்றி, அதிலேயே முடிவடைந்து விடும் வலிப்பை ஃபோக்கல் எனப்படுகிறது
இது உடலில் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்
முகம் சுளித்து இழுப்பது ,சிறிய அறிகுறிகள் 30 வினாடிகளோ இருக்கும்
இவ்வாறு தொடர்ந்து 2-3, முறை வந்தால் வலிப்பு என்பதை உணர்ந்து மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமாகும்
வலிப்பு வரும் போது செய்ய வேண்டியவை,ஃபோக்கல் வலிப்பு வரும் போது கை,கால் தசைகள் இழுக்கும்,பற்களை கடிப்பார்கள் சுயநினைவிழந்து விடுவார்கள்
கட்டுப்பாடோடு செயல்பட்டு, பயப்படாமல் இருக்க வேண்டும,ஓரிரு நிமிடங்களில் அந்த வலிப்பு நின்று விடும்
எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கவனித்து, உறுப்புகள் செயல்படும் விதத்தையும் தன்மையை அறிந்து மருத்துவ சிகிச்சை மருத்துவரிடம் கூறவேண்டும்
வலிப்பு வரும் போது செய்யக்கூடாதவை,
நாக்கு கடிக்கிறார்கள் என்று கையை உள்ளே விடக்கூடாது,
கையை கடித்து துண்டாக்கும் வலிமை இருக்கும்
வலிப்பு வரும் போது இரும்பு ,கரண்டி கொடுப்பதும் மிகவும் ஆபத்தானது,கை கால்களில் காயம் ஏற்படும்,எனவே
இரும்பு பொருள் குடுக்கக்கூடாது,
வலிப்பும் நிற்காது
முதல் உதவி  கொடுப்பது உடனே மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமாகும்