Sidhanathan K       Jul 18, 2023

15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு மீண்டும் வரப்போகும் டபுள் டெக்கர் பஸ்..!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 1997ஆம் ஆண்டு இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்தது.

இந்த வகை பஸ்ஸின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கி.மீ. அதற்கு மேல் ஓட்டினால் கவிழ்ந்து விடும் அபாயம் இருந்தது.

மேலும், சென்னையில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு காரணமாக, டபுள் டக்கர் பஸ் சேவையை தொடர முடியாமல், 2008ம் ஆண்டிலேயே இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது.

இப்போது மீண்டும் இந்த பஸ்ஸை கொண்டுவரப்போவதாக, கடந்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.

சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்து சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக, மின்கம்பிகள் அதிகம் இல்லாத அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் இவ்வகை பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய டபுள் டக்கர் பஸ்கள் எல்லாமே ஏசி பஸ்களாக இருக்கும் என்கிறார்கள்.

இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் சென்னையில் வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories