Tap to Read ➤

பறவைகளின் அரசன் கழுகு பற்றிய திகைப்பூட்டும் சில உண்மைகள்

தொட முடியாத உயரத்தில் பறக்கக்கூடிய மிகப்பெரிய பறவை!
Sidhanathan K
பிற விலங்குகளை கொன்று உண்ணும் கழுகுகளுக்கு பெரிய கண்களும், கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான நகம் கொண்ட கால்களும், பெரிய நீண்ட இறக்கைகளும் உள்ளன.
கழுகுகளுக்கு அற்புதமான கண்பார்வை உண்டு. ஒரு கழுகு இரண்டு மைல் தூரம் வரை அதன் இரையைக் கண்டுபிடிக்கும்.
சுமார் 74 வகையான கழுகுகள் உள்ளன. பெரும்பாலானவை யூரேசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.
பாறு, கருடன், கிருஷ்ண பருந்து,செம்பருந்து, கூளி, பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து, ஹார்பி கழுகு, கடல் கழுகுகள், வன கழுகுகள் என கழுகுகளின் பல வகைகள் உள்ளன.
பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக்கூடியது. கழுகு பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை.
பருந்தின் பார்வை மனிதனை விட 4 மடங்கு நுட்பமானது. இது கூர்மையான கண்பார்வை கொண்டதால் ஆயிரம் அடி உயரத்தில் கூட தரையில் ஓடும் முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.
கழுகு எலி,கோழிகள், தண்ணீரில் மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி ஆகும். மேலும் இறந்தவற்றை உண்ணாது.
கழுகு உயரமான முட்கள் நிறைந்த மரக்கிளைகளிலோ அல்லது மற்ற உயிரினங்கள் எளிதில் அடைய முடியாத பாறைப் பிளவுகளிலோ கூடு கட்டும்.
ஆண் கழுகு முட்கள், குச்சிகள், புல், வேர்கள், கூழாங்கற்கள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றுடன் லாவகமாக கூடுகட்டும். பின்னர் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும்.
கழுகுகள் எதிரிகளைத் தாக்கவும், முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்துக் காலங்களில் உடலிலிருந்து கந்தக அமிலத்தை வெளியிடுகின்றன. கந்தக அமிலம் எந்த உயிரினத்தையும் எரித்துவிடும்.
இன்றும், கும்பாபிஷேகம், யாகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகளின் போது கருடன் கோவிலுக்கு நேர் மேலே சுற்றி வருவதைக் காணலாம். கருட தரிசனம் நல்ல சகுனமாகும்.