Tap to Read ➤

இளநரையை சரிசெய்ய உதவும் மருத்துவ குறிப்புகள்..!!

இளமையில் நரை முடி வருவதை தடுக்கும் சில டிப்சுகள் !!
Sidhanathan K
கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப் பொடி, இஞ்சி, தேன் ஆகியவற்றை தினமும் ஒவ்வொன்றாக உணவில் சேர்த்து வரலாம்.
மருதாணி இலை, வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதனை இரவில் தலைமுடியின் வேர்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால், நரை முடி விரைவில் மறைந்து மிகவும் கருமை நிறமாக மாறும்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது.
நெல்லிக்காயை வெட்டி வெயிலில் காயவைத்து எண்ணெயில் போட்டு, எண்ணெயை சூடாக்கி தலையில் நன்றாக மசாஜ் செய்தால் வெள்ளை முடி மறைந்துவிடும்.
நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கொதிக்க வைத்து வாரம் இருமுறை தலையில் தடவினால் நரை முடி நீங்கும்.
மருதாணி இலையுடன் அவுரி இலை பொடி சேர்த்து அரைத்து தலையில் தடவி வந்தால் தலை முடி நன்கு கருமை நிறமாக மாறி விடும்.
வாரம் ஒருமுறை நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து சிறிது சூடாக்கி தலையில் தடவி மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து சிகைக்காய் கொண்டு குளித்து வந்தால் விரைவில் நரை முடியைப் போக்கி கருமையான தலை முடியைப் பெறலாம்.