Varalakshmi N       May 18, 2026

உடல் சூட்டை குறைக்கும் எளிய வழி – தலைக்குளியல் Tips!   

AI-IMAGE

கோடைகாலத்தில் தலையை சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கும்       புத்துணர்ச்சிக்கும் மிகவும் அவசியம். சரியான நேரத்தில்       தலைக்குளிப்பது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்

அதிக வெப்பம் காரணமாக உடல் சூடும் வியர்வையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் சரியான முறையில் தலைக்குளிப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.

வெதுவெதுப்பான அல்லது        குளிர்ந்த நீரில் தலைக்குளிப்பது மன அழுத்தம், சோர்வை குறைத்து, மனதை அமைதியாக வைத்து புத்துணர்ச்சி அளிக்கும்.

கோடையில் அதிக வியர்வையால் தலையில் வியர்வை மற்றும் அழுக்கு சேரும். வாரத்திற்கு 2–3 முறை எண்ணெய் தடவி தலைக்குளிப்பது உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவும்.

அதிக வெயிலில் வெளியே சென்ற பிறகு தலைக்குளிப்பது சோர்வையும் உடல் சூட்டையும் குறைக்க உதவும் அல்லது மாலை நேரத்தில் தலைக்குளித்தால் உடல் சோர்வு குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.

தலைக்குளித்த பிறகு இயற்கையாக முடியை உலர விடுவது உடலுக்கு சீரான குளிர்ச்சியை தரும்.

அதிக ரசாயனங்கள் உள்ள ஷாம்புக்களை தவிர்த்து, மிதமான மூலிகை ஷாம்புகளை பயன்படுத்துவது தலைச்சூட்டை குறைக்க உதவும்.

தலையை சுத்தமாக வைத்திருப்பதால் பொடுகு மற்றும் பூஞ்சை தொற்று       மற்றும் தொற்றுகளைத் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

தினமும் சரியான முறையில் தலைக்குளியல் செய்வது உடல் சூட்டை குறைத்து, மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்க உதவும்.

AI-IMAGE