Tap to Read ➤

பன்றி இறைச்சி உண்பதால் குடற்புழு நோய் ஏற்படும் அபாயம் !!

பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?
Sidhanathan K
பன்றி இறைச்சி குளிர்ச்சி என்றும், மூல நோய் குணமாகும் என்றும் வதந்திகள் உண்டு.
மேற்கத்திய நாடுகளில் பன்றி இறைச்சி முக்கிய உணவாக இருப்பதால், வெள்ளைப் பன்றிகளை வீட்டில் வளர்த்து உண்பார்கள்.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்பட்டு உண்ணப்படுகிறது என்று இலக்கியத்திலும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பன்றி இறைச்சி சாப்பிடுவதை இஸ்லாம் தடை செய்கிறது. ஒரு வேலை அனுபவ அறிவின் அடிப்படையில் தான் இந்த முடிவுக்கு வந்திருப்பார்களோ ?
பன்றி இறைச்சியை தொடர்ந்து அதிக அளவில் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் பசியை தூண்டும்.
மற்ற நோய்களுக்கு நாம் உட்கொள்ளும் மருந்தின் வீரியத்தைக் குறைத்து, அதன் செயல்திறனை வெகுவாகக் கெடுக்கும்.
பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round Worm) ஊசிப்புழு (Pin Worm) கொக்கிப்புழு (Hook Worm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன.
புழுக்கள் இடும் முட்டைகள் இரத்த நாளங்கள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மூளைக்கு சென்றால் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.
இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மாரடைப்பு உண்டாகிறது. மேலும் கண்களை சென்றடைந்தால் கண்பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு பன்றி இறைச்சியை உண்பதன் மூலம் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழு முட்டைகள் மனித உறுப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.
பன்றி இறைச்சியில் திரிசூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது.
பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து விட்டால் புழுக்கள் மரணித்து விடுகின்றன என்ற தவறான கருத்து மக்களிடையே உள்ளது.
அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டபோது, 24 பேருக்கு திரிசூரா திச்சுராஸிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 22 பேர் நன்கு சமைத்த பன்றி இறைச்சியை சாப்பிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.