Tap to Read ➤

அஜினோமோட்டோவால் ஏற்படும் பாதிப்புகள்

நாவின் சுவைக்காக உணவுவில் சேர்க்கப்படும் அஜினோமோட்டோ, பல பாதிப்புகளை உண்டாக்கிறது.
HTML Tamil
அஜினோமோட்டோ என்னும் ஒரு வகை உப்பு, உணவுகளில் சுவையை மேலும் கூட்டுவதற்காக சேர்க்கப்படுகிறது.
இன்றைய அவசரகால உலகத்தில், சுவையைக் கூட்டுவதற்காக அஜினோமோட்டோவை பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்.
சாலையோர கடைகள் தொடங்கி, ரெஸ்டாரண்ட் வரை எல்லா உணவகங்களிலும் ருசியை கூட்ட இதனை பயன்படுத்துகிறார்கள்.
அளவுக்கு அதிகமாக அஜினோமோட்டோ சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை, கால்கள் மரத்துப்போதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவை உட்கொண்டால், ஆண், பெண் என இருபாலருக்கும் முடி கொட்ட அதிக வாய்ப்புள்ளது
அஜினோமோட்டோவை அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் வியர்வை பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் உடலில் நீரிழப்பு உண்டாகிறது.
அஜினோமோட்டோ உணவை தொடர்ந்து உண்பவர்களுக்கு, இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துகிறது. இதனால் அதிகமான பசி ஏற்படுகிறது.
இத்தகைய உணவை அடிக்கடி உண்ணும்போது கொழுப்பு அதிகரித்து சதை போடுகிறது, உடல் எடை கூடினால், சுகர் மற்றும் இதய நோயும் வர வாய்ப்பு ஏற்படுகிறது.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இத்தகைய உணவுப் பொருட்கள், நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடுகிறது.
அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவை தொடர்ந்து உண்பவர்கள், முகத்தில் எரிச்சலும், அரிப்பு போன்ற உணர்வுகள் வருவதற்கும் இது காரணமாகிறது.