Tap to Read ➤

நட்ஸ்களை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

அளவுக்கு மீறி நட்ஸ்களை உண்டால் சில பாதிப்புகளும் ஏற்படுகிறது.
HTML Tamil
'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியை அறியாதவரும், சொல்லாதவரும் பெரும்பாலும் இருக்க முடியாது.
இந்த பழமொழியைப் போலவே, நாம் உண்ணும் உணவும், அளவுக்கு அதிகமானால், உடலில் சில பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது.
அந்த வகையில், பாதம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை, அளவுக்கு அதிகமாக உண்ணும்போது, உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
பாதாம், முந்திரி, அக்ரூட் உள்ளிட்ட நட்ஸ்களை அதிகம் உண்பதால், வீக்கம் அல்லது வாயு போன்ற உணர்வு உடலில் ஏற்படுகிறது.
ஒருசில நட்ஸ்களில் பைட்டேட்ஸ், டானின்கள் போன்ற கலவைகள் இருப்பதால் ஜீரணிக்க முடியாமல், வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
திராட்சை போன்ற நட்ஸ்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் உள்ளதால், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அதிகம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.
நட்ஸ்சில் உள்ள பைட்டிக் அமிலம், இரும்புச்சத்து உற்பத்தியை குறைத்து விடுகிறது. இதனால் சோர்வு, அனீமியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
தாமதமாக செரிமானம் ஆகக்கூடிய நட்ஸ்களை, தினமும் அளவுக்கு அதிகமாக உண்டால், வயிறு உப்புசம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அதிக கலோரிகள் இருக்கும் நட்ஸ்களை தினமும் அளவுக்கு மீறி உண்டால், உடல் உடை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
பிரேசில் நட்ஸ்களில் அதிகம் செலினியம் இருப்பதால், இதனை அதிகம் உண்டால் சுவாசப் பிரச்சனைகள், மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் முறையாக நட்ஸ்களை உண்பவர்களுக்கு, அலர்ஜி மற்றும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், கவனமாக இருக்க வேண்டும்.