Sidhanathan K       Jun 03, 2023

சென்னையில் மிகக்குறைந்த கட்டணத்தில் மின்சார பேருந்து சேவை துவக்கம்..!!

கிரீன் மொபிலிட்டி நிறுவனம் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிறுவனம் பெங்களூரு - திருப்பதி மற்றும் ஹைதராபாத் - விஜயவாடா வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குகிறது.

இந்நிலையில் 'நியூகோ' என்ற பெயரில் புதுச்சேரி, பெங்களூரு, திருப்பதி இடையே முதல் மின்சார இன்டர்சிட்டி பஸ் சேவையை சென்னையில் இருந்து இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 12 பேருந்துகள் திருப்பதிக்கும், 30 பேருந்துகள் பெங்களூருக்கும், 12 பேருந்துகள் புதுச்சேரிக்கும் இயக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மின்சார பேருந்துகளுக்கான டிக்கெட் ஒன்றின் ஆரம்ப விலை ரூ.319 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து சேவையை பயன்படுத்த, நியூகோ பிராண்டின் இணையதளத்தில் https://nuego.in/ அல்லது Red Bus, Paytm மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories