Varalakshmi N       Aug 19, 2023

தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகம் ....MTC Green Bus!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது

மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்து,  சுமார் 57, 613 கோடி ரூபாய் செலவிடவுள்ளது

MTC Green Bus 100% மின்சாரம் மற்றும் 0% எமிஷன், மேலும் அசோக் லேலண்ட் நிறுவத்தின் சர்க்யூட் மாடல் ஆகும்

இந்த பஸ் முழுவதும் குளிரூட்டப்பட்ட  32 இருக்கைகள், ஜிபிஎஸ் மற்றும்  தானியங்கி கதவுகள், தீயணைப்பு அமைப்புடன் போன்ற சிறப்பு  அம்சங்கள் இடம்  பெற்றுள்ளது

தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என  அமைச்சர் சிவசங்கர் அவர்கள் கூறியுள்ளார்

முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும்,   அதில் 100 பேருந்துகள் மட்டும்  டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்

இதையடுத்து இந்த பேருந்துகளை  முதலில் சென்னையில் சோதனை முறையில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

சென்னைமட்டுமின்றி, திருச்சி, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர்,  வேலூர் ஆகிய பெருநகரங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது