Tap to Read ➤

இளம் வயதில் ஒய்வு பெற்ற இங்கிலாந்து வீரர் யாரென்று தெரியுமா ?

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பற்றி சில தகவல்கள்
Sidhanathan K
பெஞ்சமின் ஆண்ட்ரூ ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரரும், டெஸ்ட் அணியின் தலைவரும் ஆவார்.
ஆகஸ்ட் 2011 இல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் அறிமுகமானார்.
முதல் முறையாக ஆடிய ஆட்டத்தில் அயர்லாந்து வீரர் பவுல் ஸ்டேர்லிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
2019 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த இவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இதுவரை 58 டெஸ்ட் போட்டியில் விளையாடி 2,579 ரன்களையும், 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் குறைவான பந்துகளை சந்தித்து அதிவிரைவாக இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆவார்.
டெஸ்ட் போட்டியில் ஆறாவது வீரராக களம் இறங்கி பேர்ஸ்டோவுடன் இணைந்து 399 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
இவர் இதுவரை 104 ஒருநாள் போட்டியில் விளையாடி 2919 ரன்களையம் 58 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 3 சதங்கள் மற்றும் 12 அரை சதங்கள் அடித்துள்ளார்.
31 வயதேயான இவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஒய்வு பெற்றார்.