பெண்கள் பொதுவாக முகம் மற்றும் உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதேபோல், அந்தரங்க பகுதிகளில் சுத்தமும், ஆரோக்கியமும் மிக முக்கியமானவை.
குறிப்பாக தொடை இடுக்குகளில் காணப்படும் கருமை, அரிப்பு போன்ற பிரச்சனைகள் பல பெண்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடும், சரியான பராமரிப்பால் இதை எளிதில் கட்டுப்படுத்தலாம்
மாதவிடாய் நாட்களுக்கு பிறகு தொடை பகுதிகளில் தேவையான காற்றோட்டம் இல்லாமையால் அந்த பகுதிகளில் நிறமாற்றம் ஏற்படலாம்
இந்த கருமையை சரிசெய்ய இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
பப்பாளியை நன்றாக அரைத்து, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல் செய்து, கருமை உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதை மாதத்திற்கு 2-3 முறை செய்தல் நல்ல பலன் கிடைக்கும்
கற்றாழை ஜெல்லை கருமையான பகுதியில் 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின்னர் கழுவவேண்டும், இவ்வாறு செய்வதால் தொடை பகுதியில் பூஞ்சை தொற்று, அரிப்பு ஏற்படாமல் தடுக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்
சரியான சுத்தம், மற்றும் முறையான பராமரிப்பு மூலம் தொடை இடுக்குகளில் ஏற்படும் கருமையை எளிதில் கட்டுப்படுத்தலாம். உடல்நல பாதுகாப்பே உண்மையான அழகு என்பதை மறக்க வேண்டாம்