Tap to Read ➤

ஒயினில் குளித்து உற்சாகமடைந்த ஜப்பானியர்கள்!

ஜப்பானியர்கள் என்றாலே வித்தியாசமானவர்கள்.
HTML Tamil
உலகின் பல்வேறு நாடுகளில் விதவிதமான வினோத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு  வருகின்றன.
அந்த வகையில், ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஒயின் குளியல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஃபிரான்ஸ் நாட்டின் Beaujolais பிராந்தியத்தில், திராட்சையில் தயாராகும் ஒயினில், பெருமளவு ஜப்பானுக்கு இறக்குமதியாகிறது
கடந்த ஓராண்டில் மட்டும், சுமார் 38 லட்சம் ஒயின் பாட்டில்கள் ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து, ஜப்பான் இறக்‍குமதி செய்துள்ளது.
டாலருக்கு நிகரான ஜப்பான் நாட்டின் யென் வீழ்ச்சியடைந்ததால், ஒயின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின் பாட்டிலின் விலை, சுமார் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த ஒயினை, தொட்டியில் நிரப்பி அதில் குளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வித்தியாசமான நிகழ்ச்சி, ஜப்பான் நாட்டின் Hakone நகரில் அரங்கேறியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என மது பிரியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஒயினில் உற்சாகமாக குளியல் போட்டனர்.