Tap to Read ➤

உடலுக்கு நன்மை தரும் நடை பயிற்சி

தினமும் காலையில் நடைப் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாகும்.
HTML Tamil
எந்தவித ஆபத்தும் இல்லாத நடைப் பயிற்சியை தினமும் செய்தால் வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனையும் அடையலாம்.
தினமும் காலை மற்றும் மாலையில் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டலே பல நன்மைகளை பெறலாம்.
நடைப் பயிற்சி செய்வதால் பல மடங்கு பிராண சக்தி அதிகரிக்கிறது. இதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
நடைப் பயிற்சியால் மூளையின் திறன் அதிகரித்து, ஞாபக திறனை சிறப்பாக வைக்கிறது. சோர்வில்லாமல் சுறுசுறுப்படைய செய்கிறது.
தினமும் நடைப் பயிற்சி மேற்கொண்டால், அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகள் குறைந்து, உடல் எடை குறைய தொடங்கும்.
தினமும் காலையில் நடைப் பயிற்சி செய்வதால் பசியின்மை, தாகம், அஜீரண கோளாறுகள் சரியாகும்.
மூட்டு வலி, தேய்மானம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நடைப் பயிற்சி உதவுகிறது. எலும்புகளுக்கு அதிக வலிமையை தருகிறது.
தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்வதால், திசு அழிவு குறைந்து, புதிய செல்கள் உருவாகிறது. இதனால் இளமை மேம்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடைப் பயிற்சி மேற்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கும்.
தினமும் காலையில் நடைப் பயிற்சி செய்தால், இரத்த அழுத்தம் குறைந்து, மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்வோடு இருக்கலாம்.