Tap to Read ➤

காஷ்மீரில் பிரதமர் பேரணி அருகே டிரேன் அட்டாக்?

Mysterious blast before Prime Minister Narendra Modi’s visit in Kashmir may have been an IED dropped by a drone.
HTML Tamil
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகள் தாண்டி உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று காஷ்மீர் சென்றிருந்தார்
பிரதமர் வருகையையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தது
ஜம்மு அருகே சம்பாவில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பஞ்சாயத்து உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்
அப்போது பேரணி நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் பயங்கர சத்தத்துடன் எதோ ஒன்று வெடித்துச் சிதறியது
பிரதமரின் நிகழ்ச்சி தொடங்க சில மணி நேரத்திற்கு முன்பு இந்த வெடிவிபத்து நடந்ததால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
காஷ்மீரின் பிஷ்னா பகுதியில் இந்த குண்டுவெடிப்பு ஏற்படும் முன்பு, அங்கு டிரோன் போன்ற சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்
ஆளில்லா விமானம் மூலம் ஐஇடி வெடிகுண்டு போடப்பட்டதால் இந்தச் சம்பவம் நடந்து இருக்கலாம் என்று பாதுகாப்புப் படை தெரிவித்தது
ஜெய்ஷ்-இ-முகமது அல்லது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு இதைச் செய்திருக்கலாம் என பாதுகாப்புப் படை சந்தேகிக்கிறது
இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்