Tap to Read ➤

போலி ஆவணங்களுடன் சிம் கார்டு வைத்திருந்தால் என்ன தண்டனை தெரியுமா?

மோசடிகளை தடுக்க தொலைத்தொடர்புத் துறை (DoT) மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் !!
Sidhanathan K
போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கி பொதுமக்களை ஏமாற்றி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிம்கார்டுகள் வாங்கி உண்மையான அடையாளத்தை மறைப்பவர்கள் மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலியான வாட்ஸ்அப் கணக்கு மூலம் ஏமாற்றுதல், சிக்னல் ஆப், டெலிகிராம் ஆப் போன்ற செயலிகளில் அடையாளத்தைப் போலியாக உருவாக்குதல் போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
குற்றம் புரிவோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
சட்டவிரோத ஆன்லைன் நடவடிக்கைகளில் இருந்து பயனர்களை பாதுகாப்பதற்காக தொலைத்தொடர்பு துறை (DoT) இந்த விதிகளை வைத்துள்ளது.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபரை எவ்வித வாரண்டும் இன்றி போலிஸ் அதிகாரிகள் நேரடியாக கைது செய்து விசாரணையைத் தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் சிம் கார்டுகளின் போலி அடையாளங்களை யாரும் உருவாக்க முடியாது.
இதேபோல், OTT இயங்குதளங்களில் கூட, உள்நுழைவதற்கு முன்பு பயனர்கள் KYC விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை பெருமளவு மோசடிகளை குறைக்கும். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய சிம்கார்டுகளை விற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமின்றி மனநலம் குன்றிய ஆண்கள், பெண்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, சிம் கார்டை வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்யலாம் என்றும், அதே சமயம் e-KYC முடித்த பின்னர்தான் சிம் கார்டை வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.