சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நிம்மதியான மாதமாக அமைந்துள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
திருமண சுப காரியம் கை கூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல்கள் அதிகரிக்கும், கவனம் தேவை.
மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம். ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு புரிந்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள்.
குருவின் துணை உங்களுக்கு கூடவே வரும். 8ஆம் வீட்டில் பயணம் செய்யும் சனி நிறைய தடைகளை ஏற்படுத்துவார். குரு பகவான் துணையோடு தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும்.
விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்பு கரம் நீட்டுவார்கள். தடைபட்டுக்கொண்டிருந்த வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூல பலன் உண்டாகும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும்.
பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். சின்னச் சின்ன சண்டைகள் வரலாம், தம்பதியர் விட்டுக்கொடுத்து ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரச்சனைகள் எது வந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு தடைப்பட்டு கொண்டிருந்த பதவி உயர்வுகள் இந்த மாதத்தில் கிடைக்கும்.
சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். மொத்தத்தில் பிப்ரவரி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.