Tap to Read ➤

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..!

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்
Sidhanathan K
புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் நாலு மடங்கு அதிகமாக உள்ளது.
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
தினசரி 2 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக் மொழுக் என்று வளரும்.
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
தினமும் 5 பழங்களை இரவில் சாப்பிட்டு வர நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்.
அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் மலட்டுத்தன்மை நீங்கும்.
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம்.
அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.
அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது.
சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.