Tap to Read ➤

அதிக சத்துள்ள அத்திப்பழம் இத்தனை வகைகளா ?

அத்திப்பழத்தின் வகைகள்
Sidhanathan K
அத்திப்பழம் நம் இந்தியாவில் அரிதாக உள்ளது, இப்போது ஒரு சில விவசாயிகள் ஆங்காங்கே பயிறிடுகிறார்கள்.
பொது அத்தி (Common figs)

இந்த வகை அனைத்து நாடுகளிலும் விளைய கூடியதால் இதற்கு Common figs என்ற பெயர் சற்று இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையில் இருக்கும்.
அட்ரியாட்டிக் அத்தி ( Adriatic figs)

இது மத்தியதரைகடல் பகுதி நாடுகளில் விளையும் ஒரு வகை பழம்
செல்லஸ்டி அத்தி (Celeste Figs)

அதிக அளவு இனிப்பும் மிருதுவான சதையும் கொண்ட தன்மையினால் ஐஸ்கிரீம்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பிளாக் மிஷன் அத்தி (Black Mission figs)

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இந்த வகை பழம் பப்புல் கம் போல இருக்கும் காரணத்தால் சீஸ் செய்ய பெரும்பாலும் பயன்படுகிறது.
பிரவுன் துருக்கி அத்தி ( brown turkey figs )

மிதமான இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் துருக்கி நாட்டில் அதிகமாக விளையும் மேலும் இதில் விதை சற்று கொஞ்சமாகவே காணப்படும்.
கேளிமிர்ணா அத்தி ( calimyrna figs)

இதுவும் துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு வகை இதன் தோல் பகுதி பச்சையாகவும் உள்ளே சதை பகுதி பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
கடோட்டா அத்தி ( kadota figs)

இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த அத்தி அடர் பச்சை நிறத்திலும் உள்ளே சிகப்பு நிறத்திலும் காணப்படும் நல்ல இனிப்பு சுவை கொண்டவையாகும்.