Tap to Read ➤

பட்டாசு சத்தம் - செல்லப் பிராணிகளை பாதுகாப்பது எப்படி?

பட்டாசு வெடி சத்தத்தில் இருந்து செல்லப் பிராணிகளை எப்படி பாதுகாப்பது குறித்து பார்ப்போம்.
HTML Tamil
தித்திக்கும் தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் 24-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில், பட்டாசு வெடிப்பது முக்கிய அம்சமாக திகழ்கிறது.
பட்டாசு வெடி சத்தம், சில நேரங்களில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இதேபோலவே, வீட்டு செல்லப் பிராணிகளான நாய், பூனை உள்ளிட்ட கால்நடைகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
வீட்டு செல்லப் பிராணிகளையும், தெருக்களில் உள்ள நாய், பூனை உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.
பட்டாசுகள் வெடிக்கும் இடங்களில் செல்லப் பிராணிகளை விடாமல், பாதுகாப்பான தூரத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
பட்டாசு சத்தத்தில் இருந்து திசை திருப்பும் வகையில், வீட்டு செல்லப் பிராணிகளை கொஞ்சி, அதனுடன் மகிழ்ச்சியாக விளையாடலாம்.
இதன்மூலம் பட்டாசு சத்தத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு, உங்களின் அரவணைப்பில் செல்லப் பிராணிகளுக்கு தைரியமளிக்கும்.
மாலை நேரத்திற்கு முன்பாகவே செல்லப் பிராணிகளை வாக்கிங் கூட்டி சென்றால், அவைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்படும்
இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெடிக்கப்படும் பட்டாசு வெடி சத்தத்தில் இருந்து ஓரளவு அச்சமின்றி இருக்கும்.
வீட்டுச் செல்லப் பிராணிகளைப் போலவே தெரு நாய்களையும் பாதுகாக்கும் பொருட்டு, அவற்றிற்கு ஓரிடத்தில் உணவு மற்றும் தண்ணீர் வைப்பது நல்லது.
தெரு நாய்க்கள் இல்லாத இடமாகச் சென்று பட்டாசு வெடிக்கலாம். மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துச் சொல்வது மிகவும் அவசியமாகும்.