Tap to Read ➤

உலகக் கோப்பை கால்பந்தின் முதல் சாம்பியன் உருகுவே!

உலகக்கோப்பை கால்பந்தின் அறிமுகப் போட்டி 1930-ல் நடைபெற்றது.
HTML Tamil
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, கத்தார் நாட்டில், நவம்பர் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாத முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டிப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற 1930-ம் ஆண்டு, கால்பந்து வரலாற்றின் புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது.
1930-ம் ஆண்டு, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே நாட்டில், முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது.
ஜூலை 13 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற இந்தப்போட்டியில், மொத்தம் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.
உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில், பிரத்யோகமாக கட்டப்பட்ட மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
1928-ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் உருகுவே அணி, 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்து சாம்பியன் ஆனாது.
ஜூலை 30-ல் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை இறுதியாட்டத்திலும் அர்ஜெண்டினாவும், உருகுவே அணியும் மோதியதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
உலகக்கோப்பை இறுதி போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்து, உருகுவே முதல் சாம்பியனானது.
உலகக் கோப்பை வென்றதை உற்சாகமாக கொண்டாடும் வகையில். ஜூலை 31 அன்று,  விடுமுறை தினமாக உருகுவே அரசு அறிவித்தது.
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் கோலடித்தவர் ஃபிரான்ஸின் லூசியன் லாரன்ட். மெக்ஸிகோவுக்கு எதிரான முதல் போட்டியில் முதல் கோல் அடித்தார்.
1930-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், பராகுவேவுக்கு எதிரான போட்டியில், அமெரிக்க வீரர் பெர்ட் படேநாட், முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார்.