உடலில் சேரும் கொலஸ்டராலை உடைத்து எடுக்கும் ஆற்றல் லெசிட்டினுக்கு உண்டு. உடலில் போதுமான அளவு லெசிட்டின் உணவு சேர்த்து வந்தால் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் அடைத்துக் கொள்வதில்லை
லெசிட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது மூளை, நரம்பு மண்டலம், உறுப்புகள் செல்களை புதுப்பித்து பாதுகாக்கப்படுகிறது
அதிக அளவு கொலஸ்ட்ரால் உடலில் சேராமல் இருக்க எல்லா வகையான மாமிச கொழுப்புள்ள உணவுகளை குறைக்க அல்லது தவிர்க்க வேண்டும்
உடலில் லெசிட்டின் அளவை அதிகரிக்க எல்லா வகையான அவித்த மீன் மட்டும் சாப்பிடலாம்
சைவ உணவு காரர்கள் முட்டைக்கு பதிலாக 1 கப் சோயா பீன்ஸ், பால், சாம்பா ரவை உப்புமா சேர்த்துக்கொள்ளலாம்
முட்டையின் மஞ்சள் கருவில் லெசிட்டின் அதிக அளவு உள்ளது, முழுதானியங்கள், பால், ஈரல் போன்ற உணவுகளில் லெசித்தின் ஏராளமாக உள்ளது