Sidhanathan K       Jan 16, 2024

உடலுக்கு வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் முக்கியம்.. ஏன் தெரியுமா..?

நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. அந்தவகையில், வைட்டமின் ஏ பல தொற்றுநோய்களுக்கு எதிராக உடலை போராட உதவுகிறது.

வைட்டமின் பி உடலின் செல்கள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்கிறது. மேலும், வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

அது போலவே வைட்டமின் ஈ தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது.

இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் தோல் மற்றும் முடியை சேதப்படுத்தும், அதே வேளையில் உங்கள் தசைகளையும் பலவீனப்படுத்தும். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

இது ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பாதாம்

2 டீஸ்பூன் (30 கிராம்) சூரியகாந்தி விதைகள் 4.2 மி.கி வைட்டமின் ஈ ஊட்டச்சத்தை வழங்குகின்றன. இந்த விதைகள் செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.

சூரியகாந்தி விதைகள்

ஒரு முழு அவகேடோ பழத்தில் 2.7 மி.கிராம் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் 18 சதவீதமாகும்.

அவகேடோ

ஒரு கப் சமைத்த கீரையில் 1.9 மி.கி வைட்டமின் ஈ உள்ளது. இது சிறந்த தோல் பராமரிப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அடைய உதவுகிறது. 

கீரை

இது உடலுக்கு புரதத்தை மட்டுமல்லாமல், வைட்டமின் ஈயையும் வழங்குகிறது. வேர்கடலையில் இருந்து தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவான 2.2 மி.கிராம் வைட்டமின் ஈ-ஐ பெறலாம்.

வேர்க்கடலை

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories