Tap to Read ➤

குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது தரவேண்ய உணவுகள்...!!

குழந்தைகளுக்கு சுமார் 6 மாதத்தில் பல் தோன்றும்
HTML Tamil
குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது, ஈறுகள் சிவந்து வீங்குதல், முகம், கன்னங்கள் சிவந்திருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
குழந்தைகள் பற்கள் முளைக்கும் சமயங்களில் கையில் கிடைப்பதை கடிப்பார்கள். கடுமையான வலியால் விடாமல் அழுவார்கள்.
அந்த சமயங்களில் சில ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களை கொடுத்தால், வலி குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் போது, என்னென்ன உணவு வகைகளை கொடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை கொடுப்பது நல்லது.  குழந்தைகளுக்கு வலி ஏற்படாது. நல்ல சக்தியும் கிடைக்கும்.
சீஸ்

குழந்தைகளுக்கு ஒரு துண்டு சீஸை வாயில் மெல்வதற்கு கொடுக்கலாம். சீஸானது ஈறுகளின் வலியைக் குறைத்துவிடும்.
அவகேடோ

 பல் முளைக்கும்  குழந்தைகளுக்கு அவகேடோவைக் கொடுக்கலாம். இதனால், வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் சத்து கிடைக்கும்.
வெள்ளரிக்காய்

குழந்தைகளுக்கு ஈறுகளில் ஏற்படும் உறுத்தல்கள், வீக்கங்கள் மற்றும் வலிகளை போக்க, வெள்ளரிக்காயைக் கொடுக்கலாம்.
பீச் பழம்

குழந்தைகளுக்கு ஒரு துண்டு பீச் பழத்தைக் கொடுக்கலாம். இதிலுள்ள கால்சியம் சத்து குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்
கேரட்

எளிதில் மெல்லக்கூடிய கேரட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேரட்டின் சுவை குழந்தைகளுக்கும் பிடிக்கும்
பயறுகள்

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும்போது, நன்கு வேக வைத்த பயறுகளை கொடுக்கலாம். இதனால் சீக்கிரம் பற்கள் முளைக்கும்.