Tap to Read ➤

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

உணவு கட்டுப்பாடுகள் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
HTML Tamil
ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வந்த சர்க்கரை நோய், தற்போது எந்த பேதமுமின்றி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.
முறையற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை, மரபணு போன்ற பல காரணங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒருசில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் இதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
வெள்ளை பிரெட் உள்ளிட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய் ஆகியவற்றை உணவில் சேர்க்கக்கூடாது.
வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம் சப்போட்டப் பழம், தர்பூசணி, பேரிட்சை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
தயிர், பாலாடை, வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், கேக் வகைகள் மற்றும் இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் கொழுப்புகள் அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
சிப்ஸ், முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.
இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்டவற்றை சர்க்கரை நோயாளிகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற மசலா நிறைந்த சீன உணவுகளில், சோடியம், கலோரி அதிகம் இருப்பதால் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.