Tap to Read ➤

உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

உணவு கட்டுப்பாடு முறையை கடைபிடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.
HTML Tamil
உடல் எடையை குறைப்பதற்காக, சிலர் டயட்டில் இருப்பதும், ஒருசிலர் 2 வேளை சாப்பிடாமலும் இருப்பதும் உண்டு.
உடல் எடையை குறைக்க, சில உணவுகளை மட்டும் தவிர்த்து விட்டு, மற்ற உணவுகளை அளவோடு உண்ணலாம்.
உடல் எடையை குறைக்க கார்போஹைட்ரட் அதிகம் உள்ள சாதம் போன்ற உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
உடல் எடையை கூட்டக்கூடிய, உருளைக்கிழங்கு சிப்ஸ் உள்ளிட்ட எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதிகமான சர்க்கரை கலந்துள்ள குளிர்பானங்கள் மற்றும் சோடா உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கொழுப்பு அதிகம் உள்ள பாலை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் கொழுப்பில்லாத பாலை அருந்தலாம்.
உடல் எடை கூடாமல் இருக்க, சுத்திகரிக்கப்பட்ட மாவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பேக்கரி உணவுகளை தவிப்பது நல்லது.
ஐஸ் கிரீமில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது. இதனால் உடல் எடை அதிக்கும் என்பதால், இதனை தவிர்க்க வேண்டும்.
அதிக அளவில் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மிட்டாய் வகைகள் மற்றும் சாக்லேட்டுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
பிரியாணி போன்ற அதிக கலோரிகள் கொண்ட உணவுகளையும், துரித உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.