Tap to Read ➤

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் உணவுகள்...!

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கலாம்.
HTML Tamil
ரத்த ஓட்டம், ரத்தக் குழாய்களுக்குள்ளும், இதயத்திற்குள்ளும் வேகமாக பாய்வதால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கே ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
புகைப்பிடித்தல் மற்றும் அதிக ரசாயன குளிர்பானங்களை குடிப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்புள்ளது.
கோபம், எரிச்சல், இயலாமை, பயம், ஏமாற்றம், மன உளைச்சல், துன்பம் உள்ளிட்ட பிரச்சனைகளாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது
ரத்த அழுத்தத்தை, நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சில பயிற்சிகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
காலையில் சூடான காஃபி, டீ உள்ளிட்டவற்றை அருந்துவதற்குப் பதில், குடிநீர், பழச்சாறு உள்ளிட்டவற்றை குடிக்கலாம்.
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழத்தில், பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ,சி, பி1 அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை சீராக்க மிகவும் உதவுகிறது.
இளநீர், மாதுளை, வெண்பூசணி போன்ற பொருட்கள், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து நம்மை பாதுகாக்கிறது.
நாள்தோறும் இரண்டு பூண்டு பல் எடுத்து, தேனில் கலந்து சாப்பிட்டால், இதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். 3 வேளையும் அரிசி சார்ந்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.