Sidhanathan K       Nov 13, 2023

அலர்ஜியை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

ஒவ்வாமை என்பது பல்வேறு வகையான விஷயங்களுக்கு நமது நோயெதிர்ப்பு மண்டலம் காட்டும் எதிர்வினையாகும்.

மாசடைந்த காற்று, தூசி மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது.

அதேபோல், உணவுகள், சில மருந்துகள் மற்றும் பூச்சிகள் காரணமாகவும் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம்.

உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

மஞ்சளில் உள்ள குர்குமின் அளவு ஒவ்வாமை அறிகுறிகளை குறைக்க உதவுவதால், தினசரி உணவில் மஞ்சளை சேர்த்து கொள்ளலாம். மேலும், இரவில் மஞ்சள் கலந்த பாலை குடிக்கலாம்.

பசலைக்கீரையை உணவில் தொடர்ந்து சேர்ப்பதால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான அலர்ஜி பிரச்சனைகளை தடுக்கலாம்.

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் ஒவ்வாமை மற்றும் ஒவ்வாமையால் ஏற்படும் தோல் பிரச்சனைகளை தடுக்க உதவும்.

கர்ப்பிணிகள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைகள், ஆஸ்துமா, தும்மல் போன்ற உடல் அலர்ஜிகள் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் டஸ்ட் அலர்ஜி வராமல் தடுக்கலாம்.

அவகோடா பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிடுவதால் நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், அலர்ஜியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

தினசரி உணவில் பூண்டு சேர்த்து வந்தால், நுரையீரல் வலுவடைவதோடு, ஆஸ்துமாவில் தோன்றும் அலர்ஜியும் கட்டுப்படும்.

இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால் உடலில் ஏற்படும் ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அரிப்பு அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சி டீயை அருந்தலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories