Tap to Read ➤

குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் !!

குளிர் காலத்திற்கு ஏற்ற உணவுகள் எவை ?
Sidhanathan K
குளிர்காலங்களில் சூடான உணவுகளை சாப்பிடுவதும் வெயில் காலங்களில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதும் பொதுவான ஒன்றாகும்.
குளிர் காலத்தில் மற்ற பருவங்களை விட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது.
மழைக்காலங்களில், அசைவ உணவுகளான மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம்.
குளிர்காலத்தில் சாப்பிட சிறந்த உணவுகளில் ஒன்று மீன். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.
மீன்களில் அதிக அளவு ஜிங்க் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள்தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது.
மீனில் ஜிங்க் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது இந்த வெள்ளை ரத்த அணுக்கள்தான்.
மீன் சாப்பிடுவதால் மூளை மற்றும் கண்களுக்கு மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கும். கண் மற்றும் மூளைக்கு மட்டுமன்றி இதயத்திற்கும் நல்லது. மேலும் மீன் உணவுகள் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
மழைக்காலங்களில் இரவில் கீரை வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது.
சரியான உணவைப் பெறவும், தேவையான பிராண வாயுவை உட்கொள்ளவும், குளிர்காலத்தில் சிறிதளவு வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உணவில் தேன் சேர்த்து கொள்வதன்மூலம் ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.
குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றான இஞ்சி ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக் கூடியது.
ஒரு கப் இஞ்சி டீ, உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஜீரணிக்க உதவுகிறது. மேலும், இது அசிடிட்டியை போக்க உதவுகிறது.
காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.