Tap to Read ➤

தசரா பண்டிகைக்கு வீட்டில் செய்யக்கூடிய சுவையான உணவு வகைகள்

தசரா பண்டிகையின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா ?
Sidhanathan K
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் தசரா திருவிழா பண்டிகை நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என அழைக்கப்படுகிறது.
துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்த இந்நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.
மைசூர் சாமுண்டீஸ்வரி தேவி மகிஷாசுரனை வென்ற தினமான விஜயதசமி அன்று கோவில் சிற்பங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்கள் தெய்வத்தின் வேடமணிந்து நடனமாடுவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த தசரா திருவிழாவின் பத்து நாட்களிலும் மைசூர் அரண்மனை வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிஜொலிக்கும்.
புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
தசராவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் ராமர் ராவணனை கொன்ற இந்நாளை ராமலீலா என்ற விழாவாக கொண்டாடுகிறார்கள்.
தமிழகத்தில் விஜயதசமி அன்று மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், புதிய தொழில்களை கற்கவும் இந்நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக அமையும் என்பது நம்பிக்கை.
விஜயதசமி அன்று அருமையான சில உணவு வகைகளை வீட்டில் செய்து தசரா பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
தசராவிற்கு சூஜி எனும் ரவை ஹல்வா சிறந்த ரெசிப்பியாகும்.
மசாலா அல்லது சட்னியுடன் காரமான மற்றும் மிருதுவான கச்சோரி (Kachoris) செய்யலாம்.
நெய்யில் செய்யப்பட்ட பராந்தை (parantha) மற்றும் பூரிக்கு சனா மசாலா ஒரு சிறந்த காம்போ ஆகும்.