பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வைட்டமின் பி12 ஆனது நீரில் கரையக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க வைட்டமின் ஆகும்.
இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கும், இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது.
நரம்பியல் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் பி12 இன்றியமையாதது. மேலும், உயிரணுக்களில் உள்ள மரபணுப் பொருளான டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ உற்பத்திக்கு உதவுகிறது.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் வளர்சிதை மாற்றத்திலும் பி12 முக்கிய பங்காற்றுகிறது. வைட்டமின் பி12 இன் குறைபாடு நாள்பட்ட சோர்வு, பலவீனம், நினைவாற்றல் இழப்பு மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
வைட்டமின் பி12-ஐ இயற்கையாக அதிகரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும். அந்தவகையில், வைட்டமின் பி12 அளவை அதிகரிக்க எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகளை இங்கே காணலாம்.
ஆடுகளின் கல்லீரலில் பி12 நிறைந்துள்ளது. இந்த உணவுகள் அதிக அளவு வைட்டமின்களை வழங்குகின்றன. இது ஆற்றல் உற்பத்தி மற்றும் நரம்பியல் செயல்பாட்டிற்கும் அவசியம் ஆகும்.
சால்மன், டிரவுட், ஹடாக் மற்றும் பிற மீன்கள் வைட்டமின் பி12 கொண்ட சிறந்த ஆதாரங்கள் ஆகும். சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இது இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
கோழி மற்றும் வான்கோழி ஆனது நல்ல வைட்டமின் பி12 ஆதாரங்கள் ஆகும். உணவில் சிக்கனை சேர்ப்பது புரத மூலங்களையும், ஊட்டச்சத்து உட்கொள்ளலையும் அஷிக்கப்படுத்த உதவுகிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. உணவில் முட்டைகளை சேர்ப்பது, சமச்சீரான வைட்டமின் பி12 அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும், வளர்சிதை மாற்றம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
பால் பொருட்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் நல்ல மூலம் என்பதால், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது வைட்டமின் பி12 அளவை அதிகரிக்க உதவும்.
சிவப்பு இறைச்சியில் இரும்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கும் ஆக்ஸிஜன் பரிமாற்றத்திற்கு நன்மை பயக்கும்.
ஸ்பைருலினா போன்ற சில வகையான கடற்பாசிகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்கள் வைட்டமின் B12 உட்கொள்ளலை கூடுதலாக வழங்க உதவுகிறது.