Tap to Read ➤

வரலாற்றில் இந்தியப்பெண்களை மணந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்!!

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் திருமணம் செய்த இந்தியப்பெண்கள் யார் ?
Sidhanathan K
இந்தியா மீது தனித்துவமான ஈர்ப்பு கொண்ட வெளிநாட்டு வீரர்கள் பல முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இங்குள்ள வரலாற்று நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தால் மேலும் ஈர்க்கப்படுகிறார்கள்.
இருப்பினும் அரிதினும் அரிதாக ஒருசில வெளிநாட்டு வீரர்கள் தங்களது வாழ்க்கை துணையையும் தங்களுக்கு பிடித்த இந்திய திருநாட்டில் பிறந்த பெண்களால் கவரப்பட்டு அவர்களையே திருமணமும் செய்து கொண்ட வரலாறும் உள்ளது.
சோயிப் மாலிக் - சானியா மிர்சா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை 2010 ஏப்ரல் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
முத்தையா முரளிதரன் - மதிமலர் ராமமூர்த்தி

இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையை சேர்ந்த மதிமலர் என்ற பெண்ணை 21 மார்ச் 2005ம் ஆண்டு திருமணம் செய்தார்.
விவியன் ரிச்சர்ட்ஸ் - நீனா குப்தா

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு இரண்டு உலகக் கோப்பை வென்று தந்த பெருமையுடைய விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய பாலிவுட் நடிகை நீனா குப்தாவை கரம் பிடித்தார்.
சான் டைட் - மசூம் சின்ஹா

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சான் டைட் இந்திய மாடல் அழகி மசூம் சின்ஹாவை 2014 ஜூன் 12ம் தேதி இந்திய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
ஹசன் அலி - சமீயா அர்ஜோ

பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, சமீயா அர்ஜோ எனும் பரிதாபாத் நகரைச் சேர்ந்த பெண்ணை காதலித்த அவர் கடந்த 2019இல் துபாயில் திருமணம் செய்து கொண்டார்.
க்ளென் மேக்ஸ்வெல் - வினி ராமன்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான இவர் சென்னை மாம்பலத்தை சேர்ந்த வினி ராமன் எனும் பெண்ணை காதலித்து பெற்றோர்களது சம்மதத்தையும் பெற்று தமிழில் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு பாரம்பரிய தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்துகொண்டார்.