Varalakshmi N       Mar 22, 2026

 மணக்கும் புதினா புலாவ் - எளிதில் செய்யலாம்..!

மணமும் சுவையும் நிறைந்த புதினா புலாவ் என்பது மிக எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சத்தான உணவு, மற்றும் காய்கறிகளின் சேர்க்கை இதற்கு     சிறப்பு ருசியை தருகிறது

தேவையான் பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 2 கப், புதினா – 1 கப்,     கொத்தமல்லி – 1½ கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 5,     வெங்காயம் – 3, பட்டை – 1 துண்டு, பிரியாணி இலை – 2, உருளைக்கிழங்கு – 2, உரித்த பட்டாணி – ¼ கப், காரட் – 2 ஸ்பூன் (துருவியது), கோசு – 2     ஸ்பூன் (துருவியது), பொரித்த பிரெட் துண்டுகள் – 5–6, எண்ணெய், உப்பு –     தேவையான அளவு

பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.     உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்

புதினா, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை     விழுதாக அரைக்கவும்

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

அதில் உருளைகிழங்கு, பட்டாணி, ஊறவைத்த அரிசியை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும். 2 மடங்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்

நீராவி வந்ததும் குக்கரை மூடி 10-15 நிமிடங்கள் வேகவைத்து அடுப்பை     அணைக்கவும். இறுதியாக கேரட், கோசு, பொறித்த பிரட் துண்டுகளை சேர்த்து அலங்கரித்து ரைத்தா அல்லது கிரேவியுடன் சேர்த்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்