Tap to Read ➤

தமிழக ரேஷன் கடைகளில் காஸ் சிலிண்டர் விற்பனை!!

புதிய வகை கேஸ் சிலிண்டரின் விலை என்ன தெரியுமா ?
Sidhanathan K
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதை செயல்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 6ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் காஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காஸ் சிலிண்டரை எளிதாகப் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ காஸ் சிலிண்டரைப் பெறலாம்.
இதற்காக முன்னா, சோட்டு என்ற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிமுகத்தின் முதல் கட்டமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் விற்பனை தொடங்கியுள்ளது.
சென்னையில் இரண்டு கிலோ சமையல் காஸ் சிலிண்டர் ரூ.958க்கும், ஐந்து கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1515க்கும் நுகர்வோர்கள் பெறலாம் என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு, காஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டால், அதற்குரிய தொகையை மட்டும் செலுத்தி வாடிக்கையாளர்கள் சிலிண்டரை நிரப்பிக்கொள்ளலாம்.
காஸ் சிலிண்டர் நிரப்புவதற்கு இந்த மாதம் இரண்டு கிலோ காஸ் விலை ரூ.250 ஆகவும், ஐந்து கிலோ காஸ் விலை ரூ.575 ஆகவும் உள்ளது.
இரண்டு மற்றும் ஐந்து கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை விற்பனை செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.