Varalakshmi N       Feb 16, 2024

பொதுவான ஆரோக்கிய குறிப்புகள்!

தேங்காய் நாரைப் பற்ற வைத்து, அதன் புகையை மூக்கில் பிடிக்க, நீர் வருவது நின்று போகும்

வெள்ளைத்தாள் ஒன்றை  பற்றவைத்து, அதன் புகையை நுகர்ந்தால், அடிக்கடி ஏற்படும் ஒற்றைத் தலைவலி நீங்கும்

வெந்நீரில் வேப்பிலையை போட்டு,குளித்து வந்தால் சரும அலர்ஜி, சொறி, சிரங்கு நீங்கும்

கஸ்தூரி மஞ்சளை அரைத்து  முகத்தில் தடவி வந்தால், பருக்கள் மறையும்

புளித்துப்போன தயிருடன் எலும்மிச்சம் சாறு கலந்து தலைமுடியில் தேய்த்து  10-15 நிமிடம் கழித்து தலை குளித்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும்

வசம்பை சிறிது நீர் விட்டு மைபோல் அரைத்து, தலையில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின் தலையை அலசினால் பேன்கள் ஒழியும்