உடலில் கை, கால், கழுத்து போன்ற இடங்களில் ஏற்படும் சுளுக்கு நீங்க, வீட்டு வைத்தியம் நல்ல பலன் தரும்
புளி, உப்பு கரைத்து நன்கு கொதிக்கவைத்து, ஆறியவுடன் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்றுப்போட்டால், சுளுக்கு, மற்றும் வீக்கம் மறையும்
பிரண்டை சாறு எடுத்து அதில் புளி, உப்பு கரைத்து காய்ச்சி பற்றுப்போட்டால் சசுளுக்கு வலி நீங்கும்
சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வீக்கம் இருந்தால், ஒரு கரண்டி நல்லெண்ணெயை சூடுபடுத்தி, ஒரு கை பிடி கல் உப்பு போட்டு லேசாக சூடுபடுத்தவேண்டும்
இதனை பருத்தி துணியில் இறுக்கமாக கட்டி, வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடதம் கொடுத்தால், வீக்கம் குறைந்துவிடும்