Sidhanathan K       Jul 30, 2023

உடம்பு நமச்சல், அரிப்பு, தோல் தடிப்பு நீங்க.... வீட்டு வைத்தியம்!

பொதுவாக எல்லோருக்கும் அரிப்பு ஏற்படாது, சில உணவு வகை, அல்லது  உப்பு தண்ணீரில் குளித்தால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும்

இதனால் நமச்சல், தோல் தடிமனாக மாறும், தோல் சிவந்துவிடும், இவற்றை நீங்க, வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரி செய்யலாம்

உடல் நமச்சல் நீங்க, ஆராம்பூ சிறிது பாசிப்பயறு கலந்து உடம்பில் பூசி குளித்தால், நமச்சல் நின்றுவிடும்

அரிப்பினால் உண்டாகும் சிறு சிறு புண்கள் ஆற, கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் பூசி குளித்தால், புண்கள் ஆறும்

அரிப்பினால் உண்டாகும் தோல் தடிப்பு நீங்க, வேப்பமரப்பட்டையை  தூளாக்கி, உடல் முழுவதும் பூசி,  15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்

அல்லது தும்பை இலைச்சாறு பூசி குளித்தால், தோல் தடிமன் நீங்குவதோடு, சொறி சிரங்கு இருந்தாலும், இவை  எல்லாம் குணமாகும்

நமச்சல் அதிகம் இருக்கும் இடத்தில்,  துளசி இலையை அரைத்து  பூசி வந்தால், நமச்சல் குறையும்