பெரும்பாலானோர் வீட்டில் கொசு தொல்லை அதிகம் இருப்பதால், கொசுவை விரட்ட பல வழிகளை முயற்சிப்பதுண்டு
கொசுவை விரட்ட பயன்படுத்தக்கூடிய கொசுவத்தி சுருள், அதில் இரசாயன கலவை கொண்டவையாகும்
கொசுவத்தி சுருளிலிருந்து வெளிவரும் புகையில் கார்பன் மோனாக்சைடு மற்றும் தார் கலவை ஆகும்
இவை மிகவும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை வெளியேற்றுவதால், அலர்ஜி, ஆஸ்துமா, தலைவலி, வாந்தி போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும்
இவற்றை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து, மூலிகை பொடியை பயன்படுத்தவும், எந்த பக்க விளைவுகளும் வராது
சாம்பிராணி பொடியுடன் மாவிலைப் பொடி, நொச்சி இலை பொடி, வேப்பிலை போடி, கலந்து புகை போட்டு வந்தால் கொசு தொல்லை ஒழியும்
ஜன்னல்களை திறந்து வைத்து, நெருப்பில் போட்டு புகைக்க கொசுக்கள் வெளியேறிவிடும்