Tap to Read ➤

குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய நல்ல பழக்கங்கள்

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லித் தருவது பெற்றோரின் கடமை.
HTML Tamil
'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என்ற பழமொழிக்கேற்ப சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லித்தர வேண்டும்.
பெற்றோர்கள் அலட்சியமாக இருந்து விட்டால், குழந்தைகள் வளர்ந்த பின்னர் குணநலங்களை மாற்றுவது மிகவும் சிரமமாகி விடும்.
குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டிய நல்ல பழக்க வழக்கங்களைப் பற்றி தெரிந்த கொள்வோம்.
சரியான நேரத்தில் தூங்கும் பழக்கத்தையும், தூங்காமல் இருந்தால் ஏற்படும் பாதிப்புகளையும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
தினமும் குளித்தல், பல் துலக்குதல், கை, கால்களை கழுவுவது உள்ளிட்ட சுத்தம் தொடர்பான பழக்கங்களை சொல்லித்தர வேண்டும்.
குழந்தைளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகளை மறக்காமல் சொல்லிக் கொடுப்பது முக்கியமாகும்
அனைவரையும் மதித்து, மரியாதை கொடுக்க, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டியது அவசியமாகும்.
நேரம் தவறாமை என்ற பழக்கத்தை சிறு வயதிலேயே சொல்லித் தந்தால், அது அவர்களின் வாழ்க்கையை சீராக கொண்டு செல்ல உதவும்.
அதிக நேரம் டிவி பார்ப்பதை தடுத்து, அதற்குப் பதிலாக விளையாட்டில் ஈடுபட வைத்தால், குழந்தைகளின் உடல் நலம் ஆரோக்கியமாகும்.
பிட்சா, பர்க்கர் போன்ற உணவுகளை வாங்கிக் கொடுக்காமல், வீட்டில் சமைத்த உணவை சுவைக்க, குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சேமித்து வைக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தால், பிற்காலத்தில் சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.